/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம்
/
வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம்
வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம்
வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம்
ADDED : அக் 19, 2025 09:28 PM
ராமநாதபுரம்: வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த தொடக்க நிறுவனங்களுக்கு அவற்றின் குறிக்கோள், வணிகத் திட்டம் மற்றும் நிலைத்தன்மைக்கேற்ப மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் நிதியின்றி துவங்கிய 5 ஆண்டுகளில் தோல்வியடைவதை தவிர்ப்பதற்காக வேளாண் தொழில் நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந் நிறுவனங்கள் புதுமையான திட்டங்களுடன் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பதாக இருத்தல் வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் அறிக்கையின் படி பெறப்பட்ட சராசாரி லாபம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் நிறுவனங்கள் புதுமை நோக்கத்துடன் உற்பத்தியை மேம்படுத்துவதுடன், வேலை வாய்ப்பை உருவாக்குவதாகவும், சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், சொத்து உருவாக்குவதாகாகவும் அமைய வேண்டும்.
அரசு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதுமின்றியும் அரசு நிறுவனங்களின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனமாகவும் இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் இந்திய தொடக்க நிறுவனமாக கொண்டிருக்க வேண்டும்.
விருப்பமுள்ள வேளாண் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.