/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை: இன்றும் 'ரெட் அலர்ட்'

ADDED : அக் 22, 2025 07:52 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை பெய்வதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இன்றும் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் மதியம் வரை விடிய விடிய மழை பெய்தது.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கினர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6:00 முதல் நேற்று காலை 6:00மணி வரை 628.80 மி.மீ., மழை பெய்துள்ளது.
இன்றும் (அக்.22) அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ராமநாதபுரத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் வைகை அணை நிரம்பி வினாடிக்கு 1000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பரமக்குடி, பார்த்திபனுார், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.----