ADDED : அக் 22, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. சீதையை மீட்கும் பொருட்டு ராமபிரான் இவ்வழியே செல்லும் போது இங்கு இளைப்பாறினார்.
அவருக்கு தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததாக வரலாறு உள்ளது.
அமாவாசை நாட்களில் பொதுமக்கள் அங்குள்ள க டலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். நேற்று ஐப்பசிஅமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கடலில் புனித நீராடி சகலதீர்த்தமுடையவர், சவுந்தரநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.