
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே மாவூர் கிராமத்தில் ஓடை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு பாம்புகள் இணைந்து நடனமாடியபடி இருந்தன. அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து பரப்பினர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், பெரும்பாலும் 2 பாம்புகள் ஜோடி சேருவதற்காக இது போன்ற நடனத்தில் ஈடுபடும். இது ஒரு அபூர்வ காட்சி. ஆகவே ஏராளமானோர் வியப்புடன் பார்த்தனர். சிலர் வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பினர் என்றனர்.