/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ்சில் கழன்ற இரும்பு பட்டை
/
அரசு பஸ்சில் கழன்ற இரும்பு பட்டை
ADDED : நவ 27, 2025 02:01 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு டவுன் பஸ்சில் பக்கவாட்டில் இருந்த பாதுகாப்பு இரும்பு கம்பி நடுவழியில் உடைந்து விழுந்தது.
கமுதி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மதுரை, விருதுநகர்,ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று கமுதியில் இருந்து அபிராமம் வழியாக பரமக்குடிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் எட்டுக்கண் பாலம் அருகே சென்ற போது பக்கவாட்டு பாதுகாப்பு இரும்பு கம்பி உடைந்து ரோட்டில் விழுந்து உரசியபடி வந்தது.
பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு டிரைவர் பஸ்சை மெதுவாக நகர்த்தி சென்றார். கண்டக்டர் இரும்பு கம்பியை கைத்தாங்கலாக பிடித்தபடி பஸ்ஸ்டாண்ட் வரை சென்றார்.
பஸ் உரசினால் தடுமாறி விழுபவர்கள் டயரில் சிக்குவதை தடுக்க இந்த இரும்பு கம்பி பொருத்தப்படுகிறது. அது கழன்று விழுந்துள்ளது.

