/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி, ராமநாதபுரம் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
/
பரமக்குடி, ராமநாதபுரம் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
பரமக்குடி, ராமநாதபுரம் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
பரமக்குடி, ராமநாதபுரம் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
ADDED : நவ 27, 2025 02:00 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரண்டு சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் 71 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் ராமநாதபுரம், பரமக்குடி சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். ராமநாதபுரத்திற்கு இன்ஜினியர் முத்துகேசவன் அறிவிக்கப்பட்டார். இவர் வெளிநாட்டில் பணி செய்து தற்போது உள்ளூரில் வேளாண் தொழில் செய்கிறார்.
பரமக்குடி (தனி) தொகுதி வேட்பாளராக பரமக்குடியை சேர்ந்த டாக்டர் எழில் இளவரசி அறிவிக்கப்பட்டார். பல் டாக்டரான இவர் தற்போது கோவையில் பணியாற்றுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பிப்ரவரியில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.