/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது
/
வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது
ADDED : நவ 26, 2025 04:46 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த முத்துப்பாண்டி 25, கைது செய்யப் பட்டார்.
வளையப்பூக்குளம் கிராமத்தில் ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்பதாக மண்டலமாணிக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி 25, கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து மரக்குளம் கிராமத்தில் உள்ள முத்துப்பாண்டி வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை எஸ்.ஐ., பிரவீன்குமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். கஞ்சா விற்பனைக்காக எங்கிருந்து கிடைத்தது என்று விசாரிக்கின்றனர்.

