/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபம் ரயில்வே கேட் பழுது: மக்கள் பாதிப்பு
/
மண்டபம் ரயில்வே கேட் பழுது: மக்கள் பாதிப்பு
ADDED : அக் 23, 2025 04:23 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ரயில்வே கேட் பழுதாகி திறக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மண்டபத்தில் ஓம்சக்தி நகர், கலைஞர் நகருக்கு செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் மக்கள் கடந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை மதுரையில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரயில் ராமேஸ்வரம் சென்ற போது காலை 10:00 மணிக்கு ரயில்வே கேட் மூடப்பட்டது.
பின் ரயில் கேட்டை கடந்து சென்ற பின் கேட்டை திறக்க முடியாமல் மூடிய நிலையில் இருந்தது. இதன்பின் கேட் கீப்பர் கேட் லாக்கில் பழுதை சரி செய்ததால் 15 நிமிடத்திற்கு பின் மீண்டும் கேட் திறக்கப்பட்டது. இதனால் கேட் இருபுறமும் டூவீலர், வாகனத்தில் மக்கள் காத்திருந்தனர்.