ADDED : அக் 11, 2025 03:56 AM
அ நிறம் | அளவு
கடலாடி: கடலாடி அருகே முத்துரெகுநாத பட்டினம் கிராமத்தில் அம்பு முனீஸ் வரர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு முத்து ரெகுநாத பட்டினம், நேதாஜி நகர் சார்பில் சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து நேர்த்திக்கடன் பக்தர்கள் 108 பால்குடங்களை சுமந்து வந்தனர்.
மூலவர் அம்பு முனீஸ்வரர், அம்ப கிழவி, வீரமுல்லு அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
