/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் குளமாக மாறிய மினி விளையாட்டு அரங்கம்
/
பரமக்குடியில் குளமாக மாறிய மினி விளையாட்டு அரங்கம்
பரமக்குடியில் குளமாக மாறிய மினி விளையாட்டு அரங்கம்
பரமக்குடியில் குளமாக மாறிய மினி விளையாட்டு அரங்கம்
ADDED : அக் 23, 2025 11:20 PM

10 ஆண்டாக கவனிப்பாரில்லை...
பரமக்குடி: பரமக்குடி மினி விளையாட்டு அரங்கம் 10 ஆண்டுகளாக கவனிப்பாரின்றி பெய்து வரும் கனமழையால் குளமாகியுள்ளது.
ராமநாதபுரம் அடுத்து பரமக்குடியில் 2007ம் ஆண்டு முதல் மினி விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அரங்கம் பெயரளவில் இருக்கும் சூழலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டு மொத்தமாக நிலை குலைந்து நிற்கிறது.
இங்கு அப்போதைய தி.மு.க., ஆட்சியில் ரூ.30 லட்சத்தில் முதல்வர் கருணாநிதியால் அரங்கம் திறக்கப்பட்டது. தொடர்ந்து எந்த செயல்பாடும் இன்றி 400 மீட்டர் டிராக் முதல் மைதானம் முழுமையாக வீணாகியுள்ளது.
இது குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டும் சூழலில், கடந்த மாதம் இடிந்து போன காம்பவுண்ட் சுவர் மீண்டும் சீரமைக்கப்பட்டது. ஆனால் மைதானம் ராமநாதபுரம் ரோட்டில் இருந்து 3 அடி வரை பள்ளமாக இருக்கிறது.
இதனால் மழைநீர் தேங்கும் களமாக விளையாட்டுக் களம் உருமாறி குளமாகியுள்ளது. தற்போது நவீன பளு தூக்குதல் பயிற்சி மையம் மட்டுமே அவ்வப்போது செயல்பட்டு வருகிறது.
தேர்தலுக்குப் பிறகு பரமக்குடியில் நேரடியாக களம் கண்டு தி.மு.க., எம்.எல்.ஏ., வெற்றி பெற்றார். மேலும் விளையாட்டுத்துறை அமைச்சராக துணை முதல்வர் உதயநிதி இருக்கிறார். ஆகவே விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடனடியாக நிதி ஒதுக்கி, பரமக்குடி மினி விளையாட்டு அரங்கை மீட்டெடுக்க வேண்டுமென விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

