ADDED : அக் 29, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் தற்போது மழையால் காய்ச்சல் பரவியது. இதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வெங்கலக்குறிச்சி ஊராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.
வெங்கலக்குறிச்சி ஊராட்சி தெருக்களில் பணியாளர்கள் கொசு மருந்து அடித்தன. இப்பணிகளை ஊராட்சி தலைவர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

