UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. முதுகுளத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. முதுகுளத்துார் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் நேதாஜி, கருணாகர சேதுபதி முன்னிலையில் தெருக்களில் துாய்மைப் பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர். இதே போன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் கூறினர்.
