/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் மோட்டார் வைத்து வெளியேற்றம்
/
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் மோட்டார் வைத்து வெளியேற்றம்
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் மோட்டார் வைத்து வெளியேற்றம்
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் மோட்டார் வைத்து வெளியேற்றம்
ADDED : டிச 11, 2025 06:52 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் பேரூராட்சி பகுதி களுக்கு உட்பட்ட குடி யிருப்பு பகுதிகள், ரோடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் வெளியேறுவதற்கான வாய்க்கால்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாத தாலும், வாய்க்கால் பகுதி களில் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகளாலும் குடி யிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது.
மழை நீர் செல்லும் வாய்க்கால்களை ஆக்கிர மிப்பு செய்துள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுங்கட்சியை சேர்ந்த சில கவுன்சிலர்களே தடையாக உள்ளதால் நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடியாத சூழலில் பேரூராட்சி அதிகாரிகள் உள்ளனர்.
இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே டீசல் மோட்டார் மூலம் குடியிருப்பு பகுதி களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்று வதும், பிறகு மழை பெய்ததும், பழைய நிலைக்கு மழை நீர் சூழ்வதுமாக உள்ளது.
மழைநீர் செல்லும் வாய்க்கால் அடைப்புகளை சரி செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றி தற் காலிக தீர்வை மட்டும் ஏற்படுத்தும் நிலை உள்ளதால் பேரூராட்சிக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதுடன், மக்களின் வரிப் பணமும் பயனற்ற முறையில் வீணடிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

