/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனு கொடுக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்கள்
/
மனு கொடுக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்கள்
மனு கொடுக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்கள்
மனு கொடுக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்கள்
ADDED : டிச 11, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் எஸ்.பி., அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தனர்.
ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த சிலர் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனர். அவர்களிடம் அப்பகுதியில் வசிக்கும் 40 பெண்கள் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்து உள்ளனர்.
இந்நிலையில் ஏலச்சீட்டு பணத்தை தர மறுத்ததாக 10க்கும் மேற்பட்ட பெண்கள் எஸ்.பி., அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த னர். வாசலில் இருந்த போலீசார் அவர்களிடம் மண்ணெண்ணெய் பாட்டிலை வாங்கி விட்டு மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர்.