/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் பூஜைக்கு அனுமதி கேட்டு தீர்மானம்
/
ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் பூஜைக்கு அனுமதி கேட்டு தீர்மானம்
ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் பூஜைக்கு அனுமதி கேட்டு தீர்மானம்
ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் பூஜைக்கு அனுமதி கேட்டு தீர்மானம்
ADDED : டிச 11, 2025 05:23 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தில் பாரம்பரியமாக பக்தர்களுக்கு பிராமணர்கள் நடத்தி வந்த பூஜைக்கு அனுமதிக்க வேண்டும் என யாத்திரை பணியாளர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமேஸ்வரத்தில் நேற்று யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
இதில் ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் அனுமதியுடன் நிர்ணயித்த கட்டண சீட்டுகளை பெற்றுக்கொண்டு 3ம் பிரகாரத்தில் வட, தென் மாநில பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிராமணர்கள் கங்கா பூஜை, ருத்ர ஜெபம், சங்கல்ப பூஜைகள் செய்தனர்.
ஆனால் தற்போது கோயில் நிர்வாகம் முன்அறிவிப்பின்றி பிராமணர்கள் நடத்திய பூஜைக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஏழை பிராமணர்கள் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதித்துள்ளனர்.
இவர்களின் நலன் கருதி மீண்டும் பிரகாரத்தில் பூஜைக்கு அனுமதிக்க வேண்டும். யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர்கள் 425 பேரும், பல ஆண்டுகளாக கோயிலுக்குள் உள்ள 21 தீர்த்தங்களில் பக்தர்களுக்கு இறைத்து ஊற்றி, பல மாநில பக்தர்களின் மொழிக்கு ஏற்ப கோயில் வரலாறுகளை எடுத்துரைத்து, அவர்கள் தரும் சன்மானத்தை பெற்று வாழ்கிறோம்.
இச்சூழலில் தீர்த்தம் ஊற்றும் பணியாளர்களில் தலா ஒருவருக்கு 12 சதவீதம் பணத்தை சங்க வங்கி கணக்கில் கோயில் நிர்வாகம் செலுத்திய நிலையில், தற்போது 2 அல்லது 3 மாதத்திற்கு பிறகே வழங்குவதால் எங்களின் குடும்ப வாழ்வா தாரம், குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுகளை கருதி தமிழக முதல்வர், ஹிந்து சமய அறநிலையத்துறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றினர்.

