/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி முதல் ராணி மங்கம்மாள் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்

ADDED : டிச 11, 2025 05:22 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி முதல் ரெகுநாதபுரம் வரை உள்ள 12 கி.மீ., ராணி மங்கம்மாள் சாலையை அகலப்படுத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது.
உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, தினைக்குளம் வழியாக வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம் வழியாக பிரப்பன் வலசை, ராமேஸ்வரம் செல்வதற்கு ராணி மங்கம்மாள் சாலை மற்றொரு பகுதியாக விளங்கி வருகிறது.
ரெகுநாதபுரம் வழியாக உள்ள சாலையில் வலது பக்கம் 2 மீ., அகலத்திற்கு புதியதாக பக்கவாட்டு பகுதி யில் பள்ளம் தோண்டி அவற்றில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி இரவு பகலாக நடக்கிறது. இதே போன்று திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியிலும் புதியதாக சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பல்வேறு கிராமங்களை இணைக்கக் கூடிய வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளை இணைக்கும் சாலைகளை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.