ADDED : ஜன 25, 2026 06:07 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்வதற்கு புதிய அகலப்படுத்தப்பட்ட சாலை மற்றும் திருப்புல்லாணி மும்முனை சந்திப்பில் இருந்து குத்துக்கல்வலசை வரை புதிய அகலப்படுத்தப் பட்ட சாலையும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தார் சாலையின் பக்கவாட்டுப்பகுதியில் வெள்ளை வர்ணங்கள் பூசப்படாமலும் வேகத்தடையில் அடையாள வெள்ளைக் குறியீடுகள் இல்லாமல் உள்ளது.
இந்த வழியாக வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வழி தெரியாமல் தடுமாறி விழும் நிலை ஏற் படுகிறது. எனவே புதிய தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்கள் பொதுமக்களின் நலன் கருதி பக்கவாட்டு பகுதிகளில் பிரதிபலிக்கும் கோடுகளை அமைக்கவும், சாலையோர சீமைக் கருவேல மரங்களை அகற்று வதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

