/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற முனியப்ப சுவாமி கோயில் விழா
/
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற முனியப்ப சுவாமி கோயில் விழா
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற முனியப்ப சுவாமி கோயில் விழா
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற முனியப்ப சுவாமி கோயில் விழா
ADDED : ஆக 11, 2025 03:49 AM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை கிராமத்தில் முனியப்ப சுவாமி கோயில் விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். அசைவ அன்னதானம் வழங்கபட்டது.
உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை கிராம கண்மாய் கரையோரத்தில் ஓனா பொட்டல் முனியப்ப சுவாமி கோயில் உள்ளது. இங்கு பல நுாற்றாண்டுகளாக பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய அசைவ அன்னதான விழா நடந்தது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் ஏராளமான கிடாய்கள் பலிபீடத்திற்கு முன்பாக பலியிடப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே வரிசையாக பந்தியில் அமர்ந்து பனைஓலை பட்டையில் சிகப்பு பச்சரிசியால் வேக வைக்கப்பட்ட சாதத்தை உருண்டையாக பிடித்து அவற்றில் அசைவ குழம்புகளை ஊற்றி அன்னதானம் செய்தனர். இவ்விழாவில் பெண்கள் யாரும் கண்மாய் எல்லைக்குள் வரவில்லை. ஏற்பாடுகளை நல்லிருக்கை கிராம மக்கள் செய்தனர்.