/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சமையல்காரரை அடித்து கொன்ற போதை ஆசாமிகளுக்கு வலை
/
சமையல்காரரை அடித்து கொன்ற போதை ஆசாமிகளுக்கு வலை
ADDED : நவ 23, 2025 02:15 AM

ராமேஸ்வரம்: சமையல்காரரை கட்டையால் அடித்து கொன்ற, போதை ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அன்னை நகரை சேர்ந்தவர் அன்சாரி, 65; சமையல்காரர். இவரது வீட்டருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் 'குடி'மகன்கள் போதையில் அன்சாரி வீட்டருகே மது அருந்திவிட்டு, அங்கேயே காலி பாட்டிலை வீசி உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அன்சாரி, அவர்களை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே அன்சாரி மது அருந்தி உள்ளார். அங்கு வந்த போதை ஆசாமிகள் சிலர், அன்சாரியை கட்டையால் அடித்து கொலை செய்தனர். பாம்பன் போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.
கடந்த, மூன்று நாட்களில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் போதை ஆசாமிகளால் பள்ளி மாணவி, இலங்கை தமிழர், சமையல்காரர் உட்பட, மூன்று பேர் கொலை செய்யப்பட்டது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

