UPDATED : நவ 08, 2026 04:06 PM
ADDED : நவ 08, 2026 04:02 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி தெருக்களில் புதிதாக ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
தற்போது வீடு வீடாக தனியாக குழாய் பதிக்கும் பணிக்காக ரோடுகள் தோண்டப்பட்டு புதிய பைப் அமைக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் வீட்டு வரி ரசீது ஜெராக்ஸ் பெற்று புதிய குழாய் பதிக்கப்படுகிறது.
