ADDED : அக் 01, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 7 நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.
சிக்கல் ஊராட்சித் தலைவர் பரக்கத் ஆயிஷா, மிஷா சைபுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காதர் மைதீன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் போஸ், 10-வது வார்டு உறுப்பினர் ரமேஷ் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு என்.எஸ்.எஸ்., முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், மருத்துவ முகாம், கால்நடை முகாம், மக்களை சந்தித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளது. உதவி அலுவலர் சக்தி ஒருங்கிணைத்தார். திட்ட அலுவலர் சாந்தகுமார் நன்றி கூறினார். வரும் அக்.4 வரை திட்ட முகாம் நடக்க உள்ளது.