ஓடிபி.. நடைமுறையால் கம்ப்யூட்டர் 10 (1) எடுக்கும் விவசாயிகள் பாதிப்பு
ஓடிபி.. நடைமுறையால் கம்ப்யூட்டர் 10 (1) எடுக்கும் விவசாயிகள் பாதிப்பு
UPDATED : அக் 28, 2026 05:17 PM
ADDED : அக் 28, 2026 05:14 PM
தேவிபட்டினம்: விவசாயிகள் தங்களது நிலம் தொடர்பாக கம்ப்யூட்டர் பட்டா 10 (1) எடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு ஓ.டி.பி., எண் அனுப்பப்பட்டு, அதன் மூலம் கம்ப்யூட்டர் பட்டா எடுக்கும் நடைமுறை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நெற்பயிருக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு பெறும் வகையில், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு, கம்ப்யூட்டர் பட்டா 10(1) அவசியம். இதனால் அனைத்து விவசாயிகளும் கம்ப்யூட்டர் சென்டர்களில் கம்ப்யூட்டர் பட்டா எடுத்து வருகின்றனர். ஒரே நேரத்தில், அதிக விவசாயிகளுக்கு கம்ப்யூட்டர் பட்டா எடுக்க வேண்டிய நிலையில் இந்த ஓ.டி.பி., நடைமுறையால் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர். எனவே பயிர் காப்பீட்டு நேரத்திலாவது ஓ.டி.பி., நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
