/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளாஸ்டிக் தாளில் பார்சல் விழிப்புணர்வு அவசியம்
/
பிளாஸ்டிக் தாளில் பார்சல் விழிப்புணர்வு அவசியம்
ADDED : செப் 05, 2025 11:19 PM
கீழக்கரை: திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பதார்த்தங்கள் பார்சல் செய்வதில் அதிகளவு பச்சை நிற தாள்கள் மற்றும் பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
போண்டா, வடை உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை செய்தித்தாள்களில் வைத்து மடிக்கும் போக்கு தொடர்கிறது. இதனை உண்பதால் செய்தித்தாளில் உள்ள காரியம் உணவு பண்டங்களில் படிந்து உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
வாழை இலையில் உணவு பதார்த்தங்கள் மற்றும் உணவு பார்சல்கள் செய்ய வேண்டும். அதற்கான கட்டணத் தொகையை பெறும் நிலையில் பெரும்பாலான ஓட்டல்களில் பச்சை நிற தாள்கள் பயன்படுத்துகின்றனர். இதே போன்று இனிப்பு பதார்த்தங்களிலும் செய்தித்தாள்களை பயன்படுத்தி பார்சல் செய்து கொடுக்கின்றனர்.
வாழை இலையை பயன்படுத்துவதால் அதனை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்விஷயத்தில் உணவு கலப்பு தடுப்பு பாதுகாப்பு துறையினர் உரிய விழிப்புணர்வு வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும். உணவு பிளாஸ்டிக் கழிவுகளால் மண்ணிற்கு மக்காத நிலை தொடர்கிறது. எனவே விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.