/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீவிர சிகிச்சை பிரிவில் அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் தவிப்பு
/
தீவிர சிகிச்சை பிரிவில் அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் தவிப்பு
தீவிர சிகிச்சை பிரிவில் அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் தவிப்பு
தீவிர சிகிச்சை பிரிவில் அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் தவிப்பு
ADDED : ஜன 24, 2024 04:36 AM
ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கடந்த ஆண்டு ஆக.,ல் திறக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு பகுதியாக நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இங்கு நோயாளிகளை எக்ஸ்ரே எடுக்க அழைத்துச் செல்லவும், அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்கான ஸ்ட்ரெட்சர், வீல் சேர் போன்றவைகள் இல்லை.
இதற்காக மருத்துவமனை பணியாளர்கள் ஒவ்வொரு வார்டாக சென்று அங்குள்ள வீல்சேர், ஸ்ட்ரெட்சர்களை எடுத்து வரும் நிலை உள்ளது.
அவசர நேரங்களில் நோயாளிகளை இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய கட்டடத்தில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை, அவரச சிகிச்சைக்கான இயந்திரங்கள் அனைத்தும் உள்ளது. அதே போல் வீல் சேர்களில் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் அழைத்து செல்லாமல் நோயாளிகளின் உறவினர்களை வீல் சேர்களை ஓட்டச் சொல்கின்றனர். இதனால் வீல் சேர்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர்.
அனைத்தும் இருந்தும் சிறு, சிறு விஷயங்களில் மருத்துவமனை நிர்வாகம் கவனம் செலுத்தாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

