/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேராவூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பரிதவிப்பு
/
பேராவூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பரிதவிப்பு
பேராவூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பரிதவிப்பு
பேராவூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பரிதவிப்பு
ADDED : அக் 07, 2025 03:48 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூர் வடக்கு யாதவர் குடியிருப்பு பகுதிமக்கள், குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றிசிரமப்படுகின்றனர்.
பேராவூர் வடக்கு யாதவர் குடியிருப்பு கிராமத் தலைவர் ராசுதலைமையில் ஊர் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் பேராவூர் வடக்கு யாதவர் குடியிருப்பில் 200குடும்பங்கள் உள்ளன.
காவிரி குடிநீர் வருவது இல்லை, அருகே ஒருகி.மீ.,ல் உள்ள தேவிபட்டினம் ரோட்டிற்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். சாலைகள் அமைத்து 25 ஆண்டுகளாகிவிட்டதால்குண்டும் குழியுமாக உள்ளன. ஜல்-ஜீவன் திட்ட பணிகளும் பாதியில் விட்டுள்ளனர்.
கண்மாய் பகுதியில் இரவில் இருட்டாக இருப்பதால் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.
எனவே புறவழிச்சாலை முதல்யாதவர் குடியிருப்பு வரை தெருவிளக்கு செய்துதர வேண்டும்.
தினசரிகுடிநீர் வழங்கிடவும், புதிய தார்சாலை அமைக்கவும் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.