/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருக்காத்தி கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
/
கருக்காத்தி கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
கருக்காத்தி கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
கருக்காத்தி கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
ADDED : ஆக 02, 2025 11:20 PM

ராமநாதபுரம் : திருப்புல்லாணி ஒன்றியம் மேலமடை ஊராட்சி கருக்காத்தி காலனியில் குடிநீர் வசதியின்றி 2 கி.மீ., நடந்து சென்று அருகேயுள்ள ஊரில் குடிநீர் எடுத்து வர மக்கள் சிரமப்படுகின்றனர்.
கருக்காத்தி காலனியில் வசிக்கும் பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். இதில், எங்கள் பகுதியில் குடிநீர் வசதியின்றி சிரமப்படுகிறோம். 2 கி.மீ., தள்ளுவண்டிகளில் சென்று மேலமடையில் இருந்து குடிநீர் எடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே கருக்காத்தி காலனியில் குடிநீர் வசதி செய்துதர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.