ADDED : டிச 15, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே தெற்கு ஆண்டாவூரணியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட தெருவில் சாலை வசதியில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
குடியிருப்பு மக்களுக்கு சாலை வசதி செய்து தரக்கோரி மார்க்கிஸ்ட் கமயூ., மாவட்டக் குழு உறுப்பினர் முத்துராமு, தாலுகா குழு உறுப்பினர் ஜெயகாந்தன் ஆகியோர் திருவாடானை தாசில்தார் அமர்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கிய மேரிசாராள் ஆகியோரிடம் மனு அளித்தனர்.