/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உரிமைத் தொகை பெற ஆர்வம் முகாம்களில் குவியும் மனுக்கள்
/
உரிமைத் தொகை பெற ஆர்வம் முகாம்களில் குவியும் மனுக்கள்
உரிமைத் தொகை பெற ஆர்வம் முகாம்களில் குவியும் மனுக்கள்
உரிமைத் தொகை பெற ஆர்வம் முகாம்களில் குவியும் மனுக்கள்
ADDED : ஜூலை 26, 2025 11:29 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நான்கு இடங்களில் நடந்தது. இதில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 1000 பேருக்கும் மேல் விண்ணப்பத்தினர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க எப்போது அறிவிப்பு வரும் என காத்திருந்தனர்.
இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில், மகளிர் உரிமை தொகை கோரும் விண்ணப்பங்கள் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் முகாமிலேயே பெண்கள் கூட்டம் அலைமோதியது. பட்டா மாறுதல், குடிநீர், புதிய மின் இணைப்பு போன்ற இதர விண்ணப்பங்களை விட இரு மடங்கு கூடுதல் எண்ணிக்கையில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தற்போது விண்ணப்பித்தவர்களுக்கு தகுதியானோருக்கு விரைவில் உரிமைத்தொகை வழங்கும் அறிவிப்பு அரசிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாடானை தாலுகாவில் ஜூலை 15 ல் திருவாடானையிலும், 16 ல் புதுப்பட்டினத்திலும், 22 ல் வெள்ளையபுரத்திலும், நேற்று முன்தினம் பாண்டுகுடி மற்றும் தொண்டி பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
இதுவரை நடந்த நான்கு முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தனர்.