/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீஸ் ஸ்டேஷனை கடல் நீர் சூழ்ந்து பாதிப்பு
/
போலீஸ் ஸ்டேஷனை கடல் நீர் சூழ்ந்து பாதிப்பு
ADDED : நவ 25, 2025 05:16 AM
தொண்டி: தொண்டி கடற்கரை ஓரத்தில் மரைன் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. நேற்று அதிகாலையில் திடீரென கடல் நீர் மட்டம் உயர்ந்து போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்தது. மீனவர்கள் கூறியதாவது:
தொண்டி கடலில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சில நாட்களாக கடல்நீர் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக உள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து புதுக்குடி கடற்கரை ஓரத்தில் வீடுகள் அருகே வந்தது.
மரைன் போலீஸ் ஸ்டேஷனையும் சூழ்ந்தது. ஆண்டுதோறும் இம்மாதத்தில் கடல் நீர் மட்டம் வழக்கமாக உயரும். இதற்கு வாங்கல் வெள்ளம் என்ற பெயர் உண்டு. கடல் பெருக்கு ஏற்படும் போது இது போன்ற மாற்றங்கள் நடக்கும் என்றனர்.

