/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலுக்கு சுற்றுலாபயணிகளை அழைத்துச்சென்றால் படகுகள் பறிமுதல் விபத்தை தவிர்க்க மீனவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

ADDED : டிச 30, 2025 05:26 AM

தொண்டி: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கடற்கரைக்கு வரும் பயணிகளை கடலுக்குள் அழைத்துச் சென்றால் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை துவங்கியதால் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மீன்பிடி படகுகளில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என தடை இருந்தும் சில மீனவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்றுக் கொண்டு ஏற்றிச் செல்கின்றனர். 10 பேர் பயணம் செய்யும் படகுகளில் 20க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர்.
கடலுக்குள் செல்லும் போது ஆர்வத்தில் பயணிகள் எழ முயற்சிக்கும் போது படகு ஆட்டம் காண்பதுடன் தடுமாறி கவிழ வாய்ப்பு உள்ளது.
இதுவே பெரும்பாலான விபத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
இது குறித்து தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் கூறியதாவது:
சில மீனவர்கள் சட்டவிரோதமாக நாட்டுப்படகுகளில் அதிக நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அதிகமானவர்களை படகில் ஏற்றிச் செல்வது ஆபத்தானது. சில ஆண்டுகளுக்கு முன்பு தேவிபட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மூன்று பேர் இறந்தனர்.
மீனவர் கிராமங்களில் கூட்டம் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
தடையை மீறி படகில் பயணிகளை அழைத்துச் சென்றால் படகை பறிமுதல் செய்வதோடு மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.