UPDATED : அக் 19, 2026 04:17 PM
ADDED : அக் 19, 2026 04:15 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே உலக நடை, சேகநாதபுரம் கிராமத்தில் தர்ம முனிஸ்வரர், சந்தன மாரியம்மன், கருப்பணசாமி கோயில் பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. இதையடுத்து கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் வந்தனர். தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி துாக்கி சென்று தண்ணீரில் கரைத்தனர்.விழாவில் உலகநடை, சேகநாதபுரம், கமுதி சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
