ADDED : அக் 02, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் கொலு' வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் கடைசி மைல் டெலிவரி'எனும் கருத்துருவில் கொலு வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கடைசி எல்லையான ராமேஸ்வரம் வரை அஞ்சல் சேவை வழங்குவதை குறிக்கும் வகையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இதை அக்.8 வரை பொது மக்கள் பார்வையிடலாம். இந்த கொலுவில் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள், ஆதார், பாஸ்போர்ட் சேவா கேந்திரா, டிஜிட்டல் பணபரிமாற்றம், உதவித்தொகை, ஆயுள் காப்பீடு என அஞ்சலகத்தில் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.