/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தபால் அதிகாரியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
தபால் அதிகாரியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 14, 2025 11:33 PM
திருவாடானை: தற்கொலை செய்து கொண்ட தபால் அதிகாரி உடல் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வந்திருந்த பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்தியபிரதேசம் மாநிலம் சாகார் மாவட்டம் பசந்த்விஹார் காலனியை சேர்ந்தவர் ஆர்யா மகன் பங்கஜ் ஆர்யா 24.
திருமணம் ஆகவில்லை. திருவாடானை தபால் அலுவலகத்தில் தபால் ஆய்வாளராக ஓராண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்தார். தொண்டியில் வாடகை அறையில் தங்கியிருந்த இவர் ஆக,12ல் பெண்கள் அணியும் துப்பட்டாவில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார் காதல் தோல்வியால் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர். பங்கஜ் ஆர்யா உடல் திருவாடானை அரசு மருத்துவமனையில் குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை பங்கஜ் ஆர்யாவின் பெற்றோர் மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.
அதனை தொடர்ந்து உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.