/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாய்மை பணியாளர் உள்ளிருப்பு போராட்டம்
/
துாய்மை பணியாளர் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஆக 14, 2025 11:34 PM

ராமநாதபுரம்: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துாய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி., உள்ளாட்சி பணியாளர் சங்கத்தினர் உடன் இணைந்து துாய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி அலுவலகத்தில் காலை 6:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டம் துவங்கி தொடர்ந்து நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சண்முகராஜன் தலைமை வகித்தார். இதில், சென்னையில் போராடும் துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவும், தி.மு.க., அரசு தேர்தலின் போது கொடுத்த தொழிலாளர்களின் கோரிக்கையின் படி ஒப்பந்தம முறையை ரத்து செய்து, நீண்டநாட்களாக பணிபுரிபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தினர்.