
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் தனிநபர் நடிப்பு, கதை வசனம், ஒளிப்பதிவு ஆகிய தலைப்புகளில் சிறார் திரைப்படப் போட்டிகள் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் பங்கேற்ற திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி ஆமினத் ரஹ்னா ஒளிப்பதிவு பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி பிளாஸ்டிக்கின் தீமை குறித்து தயாரித்த மூன்று நிமிட குறும்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சாதித்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், ஆசிரியர்கள் ஜீவா, தமயந்தி பாராட்டினர்.

