ADDED : ஆக 13, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில்கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். கவுரவத்தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட செயலாளர் பால்கண்ணன் முன்னிலை வகித்தனர். மாநில துணைப்பொதுச்செயலாளர் பகவதிகுமார் கோரிக்கைகளை வலி யுறுத்திபேசினார்.
மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை,அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்.
பள்ளியில் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.