/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கல் பகுதி உரக்கடைகளில் செயற்கை உரத்தட்டுப்பாடு விவசாயிகள் பாதிப்பு

ADDED : டிச 10, 2025 08:49 AM
சிக்கல்: சிக்கல் சுற்றுவட்டார பகுதியில் உரக்கடைகளில் செயற்கையான முறையில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சிக்கலை சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது: சிக்கல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் செயற்கையான முறையில் உரத்தட்டுப்பாடு ஏற்படுத்துகின்றனர். அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வைத்திருப்பதால் பெருவாரியான விவசாயிகளுக்கு கடனை அடைத்து விட்டு உரம் வாங்கக் கோரி அதிகாரிகள் நிர்பந்தித்து வரும் வேளையில் வேறு வழியின்றி விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று உரம் வாங்குவதை தவிர்த்து தனியார் கடைகளுக்கு சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்குகின்றனர்.
கூடுதலாக கம்பெனியில் இருந்து இதர உரங்களையும் சேர்த்து வாங்கினால் தான் உரம் தருவோம் எனக்கூறி நிர்பந்திக்கும் செயல் தொடர்கிறது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் சிக்கல் பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகளுக்கு கூடுதலாக வருவாய் இழப்பை ஏற்படுத்தும் கடைகளுக்கு உரிய அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.