/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 05:54 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகே தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., எம்.எல்., வி.சி.க., கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் குருவேல் (மார்க்சிஸ்ட்), முருகபூபதி (சி.பி.ஐ., எம்.எல்.,), அற்புதகுமார் (வி.சி.க.,) தலைமை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது:
இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் நவ.,21 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்கள் நான்கு சட்ட விதிகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதில் 300க்கும் குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் அரசின் அனுமதியின்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்பு முன்பு 100 ஊழியர்களாக இருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறு தொழில்கள் தான் அதிகம் உள்ளன. தற்போது இந்த வரம்புக்குள் வரும் எந்த நிறுவனமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இல்லை. தொழிற்சங்கங்கள் அ மைக்க நிறுவனத்தில் 50 சதவீதம் பணியாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என புதிய திருத்தத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சங்கங்கள் செயல்பட வழிவகுக்கும். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் உள்ளது என்றனர்.
*பரமக்குடி காந்தி சிலை முன்பு இந்திய கம்யூ., மற்றும் வி.சி.க., சார்பில் தொழிலாளர் நல உரிமைகளை பறிக்கும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். அப்போது மத்திய அரசு நிறைவேற்றிய நான்கு தொகுப்பு சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதர வாக சட்டம் இயற்றும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். வி.சி.க., மாவட்ட செயலாளர் சிவா, இந்திய கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., லிங்கம் உட்பட பலர் பேசினர்.

