/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
சாயல்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 08, 2025 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி; திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்துக் கொன்ற போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் சார்பில் நேற்று காலை 11:00 மணிக்கு சாயல்குடி மூக்கையூர் சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலாடி தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் விஜய் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சிம்சன், மாவட்ட பொருளாளர் செவல்பட்டி அந்தோணி ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர் பச்சம்மால், நிர்வாகிகள் செல்வராஜ், செவல்பட்டி பெத்து, மருதநாயகம், குட்டி உமையன், பெருமாள், ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.