UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் வரும் போது ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் வழுதுார் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் கீப்பராக ஒப்பந்த அடிப்படையில் பெருமாள் என்பவர் பணிபுரிந்தார். இவர் நவ.2ல் ரயில் வரும் போது கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்தார். ரயில் டிரைவர் நீண்ட நேரம் ஒலி எழுப்பிய பின்னர் கேட்டை மூடினார். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் பெருமாளிடம் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
