/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையால் வண்டல் மண் எடுப்பது பாதிப்பு
/
மழையால் வண்டல் மண் எடுப்பது பாதிப்பு
ADDED : ஆக 11, 2025 10:11 PM
திருவாடானை, : திருவாடானை பகுதியில் மழை பெய்வதால் வண்டல் மண் எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சிதுறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண், கிராவல், மண் போன்ற சிறு கனிமங்களை துார்வாரி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவிக்கப்பட்டது.
இத்தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்களிலும், 100க்கும் மேற்பட்ட ஊருணிகளிலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து அனுமதி வாங்கி மண் அள்ளுகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மண் அள்ளுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான கண்மாய், ஊருணிகளில் நீர் நிரம்பியதால் அனுமதி வழங்கபட்ட இடங்களில் மண் அள்ள முடியவில்லை. இந்நிலையில் மழையால் மண் அள்ள முடியாமல் அனுமதி வாங்கியவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.