ADDED : மார் 13, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், - -ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு நேற்று துவங்கியது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ரம்ஜான் நோன்பு இருப்பதும் ஒரு கடமை. இந்த நோன்பை மரியாதைக்குரிய அடையாளமாகவும், தங்களை துாய்மைப்படுத்தி அல்லாவின் கருணையை பெறவும் கடைப்பிடிக்கின்றனர்.
தினமும் சூரிய உதயத்திற்கு முன் உணவருந்தி நாள் முழுவதும் உணவு, தண்ணீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். மாலை சூரியன் மறைந்த பின் நோன்பை முடித்து உணவு எடுத்துக்கொள்வார்கள்.
நேற்று முன் தினம் பிறை தென்பட்டதால் நேற்று முதல் நோன்பு துவங்கியது.
தொடர்ந்து 30 நாட்கள் நோன்புக்கு பின் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் ஹாஜியாரப்பா ஜூம்மா பள்ளி வாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.--------

