/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடை பணியாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2024 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகம் அருகே தமிழ்நாடு ரேஷன் பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர்.
பொதுவினியோகத்திற்கு தனித்துறை, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து பொருட்களையும் சரியான எடையிட்டு பொட்டலமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில செயலாளர் முருகானந்தம், ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.