/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடை பணியாளர் மனித சங்கிலி போராட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 24, 2024 05:06 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு ரேஷன் கடைப் பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், டாஸ்மாக் சங்க மாநில செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். ரேஷனில் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதியம், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரவல், சுழற்சி முறையில் இடமாற்றம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். செயற்குழு உறுப்பினர்கள், வட்டத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.