/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற சமரச பேச்சு
/
பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற சமரச பேச்சு
ADDED : ஜூலை 05, 2025 11:05 PM
கமுதி: கமுதி தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தாசில்தார் காதர்முகைதீன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
கமுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஜன.,ல் செட்டி ஊருணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
தெற்கு முதுகுளத்துார் ரோட்டில் தரைப்பாலம் அமைத்து சுற்றுச்சாலையுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இன்று வரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து கமுதி தாலுகா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி நிர்வாகிகளுடன் தாசில்தார் காதர்முகைதீன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
இதில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அடிப்படையில் ஆவணங்கள் தயார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் முத்துவிஜயன், தாலுகா குழு செயலாளர் ஜீவானந்தம், உறுப்பினர்கள் கண்ணதாசன்,ராமர் உட்பட பலர் பங்கேற்றனர்.