UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:19 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்தவர் மீனவர் முனீஸ்வரன் 54. இவர் அக்.,1 ல் கடலில் மீன்பிடிக்க சென்ற போது மயக்கம் ஏற்பட்டு தவறி நீரில் மூழ்கி பலியானார். இவரது மனைவி வைகாசி முத்து ராமநாதபுரம் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் அரசு நிவாரணம் வழங்க கோரி மனு அளித்தார்.
அதில் தனக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். கணவர் முனீஸ்வரன் இறந்த பிறகு வருமானம் இன்றி சிரமப்படுகிறோம். எனவே தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் மூலம் எனது குடும்பத்திற்கு அரசு விபத்து நிவாரண நிதி வழங்க வேண்டும். அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.-
