UPDATED : நவ 02, 2026 04:11 PM
ADDED : நவ 02, 2026 04:06 PM

கமுதி: கமுதி அருப்புக்கோட்டை ரோடு கிளாமரம் அருகே ரோட்டோரத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை சேதமடைந்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டோரத்தில் ஊரின் பெயர், கி.மீ.,உள்ளிட்ட மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகளை குறிக்கும் எச்சரிக்கை பலகை உள்ளிட்ட விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் ரோடு கிளாமரம் அருகே ரோட்டோரத்தில் இருந்த நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை சேதமடைந்து விழுந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் அறிவிப்பு பலகை இல்லாமல் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அறிவிப்பு பலகை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
