UPDATED : நவ 01, 2026 11:28 PM
ADDED : நவ 01, 2026 07:06 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அரண்மனை பகுதியில் முழு சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்., சங்கத்தின் காவிக்கொடி ஏந்தி கோஷ வாத்தியத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. சென்ட்ரல் பிளாசா, மதுரை ரோடு, சிவன் கோயில் வழியாக சென்று அரண்மனையில் முடிவடைந்தது. அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா தாளாளர் சுவாமி ருத்ரானந்த மஹராஜ் ஆசியுரை வழங்கினார். விபாக் சம்பர்க்க ப்ரமுக் - ராமேஸ்வரம் விபாக் கணபதி ராஜா சிறப்புரை வழங்கினார். மாவட்ட சங்கசாலக் துரைசாமி ஏற்பாடுகளை செய்தார்.
