தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அனுமதியின்றி குவிக்கப்பட்ட மணல் : தாசில்தார் பறிமுதல்

அனுமதியின்றி குவிக்கப்பட்ட மணல் : தாசில்தார் பறிமுதல்

அனுமதியின்றி குவிக்கப்பட்ட மணல் : தாசில்தார் பறிமுதல்


ADDED : அக் 31, 2026 04:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 04:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை அருகே மாவூர் கிராமத்தில் அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை தாசில்தார் பறிமுதல் செய்தார். திருவாடானை அருகே மாவூர் குரூப் மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாய் மதகு மராமத்து பணிகள் நடக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் அனுமதி பெறாமல் மணல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நேற்று (அக்.,30) தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து திருவாடானை தாசில்தார் தாமஸ் மற்றும் அலுவலர்கள் சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பிரதான் திட்ட அலுவலரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அந்த மணலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றனர். அதனை தொடர்ந்து அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டது. இதற்கிடையே அரசு அனுமதியின்றி மணல் சேகரிக்கப்பட்டு பதுக்கப்பட்டது குறித்து கனிம வளத்துறையினருக்கு துறை ரீதியான புகார் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us