ADDED : நவ 18, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே பாண்டுகுடி ரோட்டில் தொண்டி எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பக்கமாக சென்ற வாகனங்களை சோதனை செய்த போது ஒரு டிராக்டரில் அனுமதி இல்லாமல் மணல் திருடி ஏற்றி சென்றது தெரிந்தது. போலீசார் டிராக்டரை கைப்பற்றி பிள்ளையாரேந்தல் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் 40, என்பவரை கைது செய்தனர்.

